மியான்மரில் படகு கவிழ்ந்து விபத்து: 33 பேர் பலி

337

மியான்மரில் டபுள் டெக்கர் பயணிகள் படகு மூழ்கியதில் பலியான 33 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

மியான்மரில் கடற்கரை நகரமான கியாக்பியூ நகரில் இருந்து நேற்று இரவு இந்த டபுள் டெக்கர் படகு புறப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். சுமார் 80 கி.மீ. தூரம் சென்ற நிலையில், மோசமான வானிலை மற்றும் ராட்சத அலைகள் காரணமாக நடுக்கடலில் படகு திடீரென கவிழ்ந்தது.

மீட்புக்குழுவினர் விரைந்து சென்று கடலில் மூழ்கிய 167 பேரை உயிருடன் மீட்டனர். 50 பேர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. எனவே, இவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என கருதப்பட்டது.

இந்நிலையில் 33 பேர் இறந்தது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 12க்கும் மேற்பட்டோரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றியதே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது

SHARE