மிரட்டும் ஜிம்பாப்வே: இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து திணறல்.

250
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி திணறி வருகிறது.cwc2015-India-720x480

ரஹானே தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது.

இதன் முதல் ஒருநாள் போட்டி இன்று ஹராரேயில் தொடங்கியது. இதில் நாணய சுழற்சியில் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச முடிவு செய்தது.

இதனால் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது. தொடக்க வீரர்களாக ரஹானே, தமிழக வீரர் முரளி விஜய் களமிறங்கினர்.

இதில் 9 பந்துகளை சந்தித்து 1 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார் முரளிவிஜய். இதனையடுத்து ரஹானே, ராயுடு நிதானமாக விளையாடினர்.

ரஹானே 34 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த திவாரி திணற ஆரம்பித்தார். இவர் 2 ஓட்டங்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார்.

உத்தப்பா நிலைத்து நின்று ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையிலும், அவர் ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் ஓட்ட முறையில் வெளியேற்றப்பட்டார்.

கெடார் ஜாதவும் (5) நிலைக்கவில்லை. இதனால் இந்திய அணி 100 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

இந்திய அணி 26 ஓவர்களுக்கு 94 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ராயுடு (43), பின்னி (2) களத்தில் உள்ளனர்.

SHARE