‘மிஸ்டர் 360’ ற்கு முதலிடம்

342

 

ஐ.பி.எல்.தொடரில் இந்தியர்களால் அதிகம் விரும்பப்படும் வெளிநாட்டு வீரர்களில் தென்னாபிரிக்க அணியின் அணித் தலைவர் டி வில்லியர்ஸ் முதலிடம் பிடித்துள்ளார். தற்போது பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார் ட வில்லியர்ஸ். மைதானத்தின் எந்த பக்கத்திலும் பந்தை விரட்டக் கூடிய அபாரத்திறன் படைத்த டி வில்லியர்ஸுக்கு ரசிகர்கள் வைத்துள்ள செல்லப்பெயர் ‘மிஸ்டர் 360’ ஆகும். அதாவது உடலைத் பல பக்கங்களிலும் திருப்பி பந்தை கண்டபடி அடிக்கும் திறன் மிகுந்தவர் டி வில்லியர்ஸ் என்பதால் அவருக்கு இந்தச் செல்லப்பெயர்.

இரண்டாவது இடத்தை மும்பை அணிக்காக விளையாடி வரும் இலங்கை வீரர் லசித் மலிங்க பெறுகிறார். கிறிஸ் கெயிலும் அவரது நெருங்கிய நண்பரான பொல்லார்டும் 3 மற்றும் 4ஆவது இடத்தில் உள்ளனர். இந்த பட்டியலில் ராஜஸ்தான் வீரர் ஷேன் வாட்சன் 5ஆவது இடம் பிடிக்கிறார். கொல்கத்தா அணியின் சுனில் நரைனுக்கு 6ஆவது இடம் கிடைத்துள்ளது.

பஞ்சாப் அணியின் மக்ஸ்வெல் 7வது இடத்திலும் கொல்கத்தா அணியின் தென்னாபிரிக்க வீரர் கலிஸ்8வது இடத்திலும் உள்ளனர். சென்னை அணியின் மைக் ஹசி 9ஆவது இடத்திலும் மற்றொரு சென்னை வீரர் பிராவோ இந்திய ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் வீரர்கள் பட்டியலில் 10ஆவது இடத்திலும் உள்ளனர்.

images

SHARE