ஜாதிக ஹெல உறுமயவின் பிரதி பொதுச் செயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமாகிய உதய கம்மன்பில மீண்டும் அரசாங்கததுடன் இணைந்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க அவர் தீர்மானித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெறவுள்ள ஊடக சந்திப்பில் உதய கம்மன்பில தனது ஆதரவை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளார்.
தற்போது அவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்திற்கு வருகை தந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்தில் இருந்து விலகி மைத்திரிபாலவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், கடந்த வாரங்களில் தனது மாகாண சபை அமைச்சு பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
ஆளும் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த உதயகம்மன்பில இன்று திடீரென மீண்டும் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளார்