மணிரத்னம் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஓ காதல் கண்மணி படத்தின் மூலம் மீண்டும் தன் பழைய மார்க்கெட்டை பிடித்து விட்டார். இதனால், தன் அடுத்த படத்தை பார்த்து நிதானமாக திரைக்கதை அமைத்து வருகிறார்.
நெருங்கிய வட்டாரங்களின் மூலம் கிடைத்த தகவலின் படி இப்படம் இந்தியா-பாகிஸ்தான் சம்மந்தப்பட்ட கதை தானாம். ஏற்கனவே உயிரே, பாம்பே, ரோஜா போன்ற சர்ச்சையான கதைகளை கையில் எடுத்து அதில் வெற்றியும் பெற்றவர் மணிரத்னம்.
தற்போது இந்த படமும் காதல் கதை தான் என்றாலும், இந்தியா-பாகிஸ்தான் சம்மந்தப்பட்ட கதை வேறு, மணிரத்னத்திற்கு சொல்லிய தரவேண்டும்? தன் அரசிய கருத்துக்களை இதில் திணித்தார் என்றால் அவ்வளவு தான் என்கின்றது கோலிவுட் வட்டாரம்.