மீண்டும் சாதனை படைத்தார் சங்கக்கார

385
உலகக் கிண்ணத் தொடரொன்றில் தொடர்ச்சியாக 4 ஆவது சதத்தைப் பெற்ற முதலாவது வீரராக சங்கக்கார இன்று பதிவானார்.இதேபோல் ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 4 சதங்களைப் பெற்ற வீரராகவும் சங்கக்கார பதிவானார்.

உலகக் கிண்ணத்தொடரில் ஸ்கொட்லாந்து அணிக்கெதிரான இன்றைய போட்டியில் சதம் பெற்றதன் மூலம் அவர் இச்சாதனையை படைத்தார்.  இதற்குமுன்னர் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக சிட்னியில் நடைபெற்ற போட்டியில் சதம் பெற்றதன் மூலம் உலக க் கிண்ணத் தொடரொன்றில் தொடர்ச்சியாக 3 சதங்களை பெற்ற வீரராக சங்கா சாதனை நிலைநாட்டியிருந்தார். இந்நிலையில் இன்றைய போட்டியில் பெற்ற சதம் மூலம் உலகக் கிண்ணத் தொடரில் தொடர்ச்சியாக 4 சதங்களை பெற்ற முதலாவது வீரராக சங்கா பதிவானார்.

 

SHARE