மீண்டும் தனது இயக்குனர் வாழ்க்கையை அரம்பித்துள்ளார் அர்ஜூன்.

450

சேவகன் படத்தின் மூலம் தனது இயக்குனர் பாதையை தொடங்கியவர் அர்ஜூன்.

பின் வேதம், ஏழுமலை போன்ற படங்களை இயக்கி வந்தவர், மதராஸி திரைப்படம் தோல்வியில் முடிந்ததால், தன் இயக்குனர் பாதையை கைவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கு பின் தற்போது ஜெய்ஹிந்த் – 2 திரைப்படத்தில் மீண்டும் தனது இயக்குனர் வாழ்க்கையை அரம்பித்துள்ளார் அர்ஜூன்.

கல்வி முறையையும் அதன் குறைபாடுகளையும் மையமாக வைத்து உருவாகும் திரைப்படம் தான் ஜெய்ஹிந்த்.

இந்தியவையே புரட்டிபோடும் ஒரு கதையில் இப்படம் உருவாக டில்லி, மும்பை, சென்னை மற்றும் வெளிநாடுகளிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தியுள்ளதாக தெரிவித்திருக்கிறார் அர்ஜூன்.

 

SHARE