மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லைபுலம்பெயர்ந்த தமிழர்களின் ஈழக்கனவு பலிக்காது: ஜனாதிபதி மைத்திரி

339

 

புலம்பெயர்ந்த தமிழர்களின் ஈழக்கனவு பலிக்காது: ஜனாதிபதி மைத்திரி
Maithripala-Sirisena

இராணுவத்தினர் தொடர்பில் நம்பிக்கையோடு செயற்படுவதுடன்  அவர்களின் கௌரவம் பாதுகாக்கப்படும் வகையில் நடவடிக்கை முன்னெடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

வெலிகந்த பாதுகாப்புப் படைத் தலைமையத்தை இன்று பார்வையிடச் சென்ற ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டை விட்டு புலம்பெயர்ந்து வாழும் சிலர் இன்னமும் ஈழக்கனவுடன் செயற்படுகின்றனர். அவற்றை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பளிக்க முடியாது என குறிப்பிட்டார்.

நாட்டின் இறைமை, மக்களின் உரிமை மற்றும் ஜனநாயகம் என்பவற்றை பாதுகாக்கும் வகையில் பொறுப்புடன் செயற்பட தாம் கடமைப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.

SHARE