மீண்டும் மோதிக்கொள்ளும் விஜய் – அஜித்.. இந்த முறை வெற்றி யார் பக்கம்

39

 

இந்த ஆண்டு துவக்கத்திலேயே விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு ஆகிய இரு திரைப்படங்களும் ஒரே நாளில் பொங்கல் ஸ்பெஷலாக வெளிவந்தது.

இதில் துணிவு முதல் நாளில் இருந்து நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், வாரிசு படத்திற்கு முதல் நாள் கலவையான விமர்சனங்கள் தான் வந்தது. அதன்பின் குடும்ப ரசிகர்களின் மத்தியில் மாபெரும் அளவில் வாரிசு படத்திற்கு வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வாரிசு – துணிவு படங்களை தொடர்ந்து மீண்டும் விஜய் – அஜித்தின் படங்கள் ஒரே நாளில் வெளிவரவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

மோதிக்கொள்ளும் விஜய் – அஜித்
விஜய்யின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தளபதி 68. வெங்கட் பிரபு இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தை அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளார்களாம்.

இப்படியொரு சமயத்தில் அதே நாளில் அஜித்தின் படமும் வெளிவரவுள்ளது. ஆனால், அது விடாமுயற்சி கிடையாது. விடாமுயற்சி படத்திற்கு பின் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் ஏகே 63 படம் தான் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதனால் மீண்டும் ஒரு முறை விஜய் – அஜித் படங்கள் ஒரே நாளில் மோதிக்கொள்ளவுள்ளது. இதில் வெற்றி யார் பக்கம் வரப்போகிறது? அல்லது இரு படங்களும் மாபெரும் அளவில் வெற்றியடைப்போகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

 

SHARE