மீனவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு இந்தியா எதிர்ப்பை வெளியிட்டுள்ளது

468

மீனவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு இந்தியா எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. அண்மையில் 82 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்திருந்தனர். அத்து மீறி இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களே இவ்வாறு தலைமன்னார், நெடுந்தீவு உள்ளிட்ட கடற் பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டதாக இலங்கைக் கடற்படையினர் தெரிவித்திருந்தனர்எனினும் மீனவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு இந்திய மத்திய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

மீனவர் கைது தொடர்பிலான பிரச்சினை குறித்து இலங்கை அதிகாரிகளிடம் எதிர்ப்பை வெளியிடுமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகாராலயம் இது குறித்து இலங்கை அதிகாரிகளிடம் அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Indias-Sushma-Swaraj-with-President-Rajapaksa

SHARE