மீள்குடியேறும் சம்பூர் பிரதேச மக்களை வாழ்த்தும் வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமேகன். தனக்குகிடைத்த ஒரு மகத்தான வெற்றி எனத் தெரிவித்தார்……!
சம்பூர்பிரதேசத்தில் மீள்குடியேற்றப்படுவதற்காக நேற்று ஒரு தொகுதி மக்கள் தங்கள் இடங்களை துப்பரவாக்க அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பின் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது
சம்பூர் பிரதேச மக்களில் ஒரு தொகுதியினர் மீள் குடியேற்றப்பட உள்ளமை மகிழ்ச்சி தருகின்றது.
திருகோணமலை சம்பூர் பிரதேச மக்கள் படும் துன்பங்களையும் அவர்களின் காணிகள் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் தொடர்பாகவும் நேரில் சென்று ஆராய்ந்து அது தொடர்பாக என்னுடைய நேரடிஅறிக்கையை 26.12.2014 ல் வெளியிட்டிருந்தேன்.
இந்த மக்கள் உடனடியாக மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் இவர்களுக்கான தொழில் தொடங்குவதற்கான நிவாரணங்களும் உதவிகளும் வழங்கப்படவேண்டும் என்று கூறியிருந்தேன்.
இது தொடர்பாக நேற்று சம்பூர் பிரதேச ஒரு தொகுதி மக்கள் அருள்மிகு பத்திரகாளி அம்மன் ஆலயச்சூழலில் தங்கள் இடங்களில் மீள்குடியேற காணிகள் துப்பரவாக்கும் பணிகளில் அனுமதித்தமை எனக்கு கிடைத்த மகத்தான வெற்றி என்றும்
மக்களின் போராட்டத்துக்கும் ஊடகங்களின் பங்களிப்புக்கும் கிடைத்த மகத்தான வெற்றியென்றும்
விரைவில் சம்பூர் பிரதேச ஏனையமக்களும் தங்கள் இடங்களில் குடியமர்த்தப்படுவதோடு நாட்டில் சகல மக்களும் தங்கள் இடங்களில் குடியமரவேண்டும். எனவும் தெரிவித்தார்.