முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் அரசியல் இப்போது தான் சூடு பிடித்துள்ளது. எதிர்ப்புக்கள் மத்தியிலும் முல்லை மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

472

முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று முன்தினம் அப்பிரதேச வாழ் மக்களின் குறைபாடுகளைக் கேட்டறிய வடமாகாணசபை முதலமைச்சர் உட்பட அமைச்சர் குழாம் சென்றிருந்தது. இதன்போது தட்டயமலை என்ற கிராமத்தில் தண்ணீர் பிரச்சினை தொடர்பாக நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் முதலமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த ஆர்ப்பாட்டத்திற்கு மத்தியிலும் துணிச்சலோடு மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் முதலமைச்சர். இம்மக்கள் சந்திப்பிற்குச் சென்ற அனைத்து அமைச்சர்களும் அரசியலுக்குப் புதியவர்கள். இருந்தபோதிலும் இவர்களின் துணிச்சலைப் பாராட்ட வேண்டும்.

மிகவிரைவில் இப்பபகுதிவாழ் மக்களுக்கு தண்ணீரைப் பெற்றுத்தருவதற்கான ஒழுங்குகளைச் செய்வேன் எனக்கூறிபின்னரே குழுவினரை மக்கள் அவ்விடத்திலிருந்து செல்வதற்கு அனுமதித்துள்ளனர்.
வடமாகாண முதலமைச்சரைப் பொறுத்தவரையில், முன்னாள் நீதியரசர் என்றவகையில் அவருடைய பொறுமை, நிதானம், இடத்திற்கேற்றவாறு செயற்படும் விடயங்கள் வரவேற்கத்தக்கது.

மக்களுடைய குறைபாடுகள் அப்பிரதேசத்தில் தீர்க்கப்படாதுபோனால், இன்னுமொருமுறை அப்பகுதிக்கு விஜயம் மேற்கொள்வார்களாகவிருந்தால் அப்பகுதிமக்களிடம் செருப்படி வாங்கும் நிலைமை உருவாகலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அப்பிரதேச அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் ஏன் ஒழுங்காக நடைபெறவில்லை என்பதைக் கண்டறிந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதனுடாக மக்களின் எதிர்ப்புக்களைத் தவிர்த்துக்கொள்ளமுடியும். காரணம் மக்களின் வாக்குகளில் தான் இவர்கள் வடமாகாணசபைக்கு சென்றவர்கள். வடமாகாணசபை அமைச்சர்கள் அதனை புரிந்துகொண்டு செயற்படுவது அவர்களின் எதிர்கால அரசியலுக்கு உகந்ததாக அமையும். எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் காணொளியினைக் கீழே காணலாம்.

SHARE