முதலில் என்னை பரிசோதித்து பார்க்க வேண்டும்- பாடகர் ‘யாசின்’ ருசிகர பேட்டி

676

இன்று நாம் காணவிருப்பது இசை துறையில் பிரபலமான பின்னணி பாடகராக திகழும் இளம் இளைஞர் ‘யாசின் அவர்களை தான். கோலிசோட என்ற படத்தில் தன் வயது முதிர்ந்த பாடலான “ஜனனம் ஜனனம் ” என்ற உத்வேக பாடலை படி பலரையும் மெய் சிலர்க்க வைத்தவர்.

 

1. சினிமா துறையில் நுழைந்த அனுபவம் பற்றி?

நான் முதலில் பாடியது மலையாளத்தில் தான், என் அப்பாவுக்கு நான் பாடகராக ஆக வேண்டும் என்று ரொம்ப இஷ்டம், பள்ளி காலங்களிலும் நண்பர்களுக்கு பாடிக்காட்டுவேன். முதன் முதலாக விதியா சாகர் இசையில் மலையாளத்தில் பாடினேன், தமிழில் “அவத்த பையா” தான் முதல் பாடல்.

 

2. தமிழில் எத்தனை பாடல்கள் பாடியுள்ளிர்கள்?

நான் நிறைய பாடல்கள் பாடி உள்ளேன்,”தீயா வேலை செய்யணும் குமார்” படத்தில் “மெல்லிய சாரல்” என்ற பாடல், “கோலி சோடா” படத்தில் “ஜனனம்” என்ற பாடல் தை தொடர்ந்து “திருமணம் என்னும் நிக்கா” படத்தில் ஒரு பாடல் என வரிசையாக நிறைய உள்ளது.

 

3. உங்கள் பாடல்கள் எத்தன அடிப்படையாக கொண்டது?

நான் எல்லா ஸ்டைல்லயும் பாட வேண்டும் என்பது தான் ஆசை, “அவத்த பையா” ஒரு மெலடி வகை, “மெல்லிய சாரல்” ஒரு வெஸ்டன் ஸ்டையில் பாடல், “ஜனனம்” பாடல் ஒரு வகையான “சுபி” இசையை சார்ந்தது, இது மாதிரி எல்லா ஜார்னல்லிலும் பாட வேண்டும்.

4. பாடகராக இருக்கும் நீங்கள் மியூசிக் கம்போஸ்ர் ஆவது எப்போது?

இப்போதைக்கு அந்த ஆசை இல்லை, ஆனால் கொஞ்சம் ஆசையும் இருக்கு, அதற்கு நான் முதலில் என்னை பரிசோதித்து பார்க்க வேண்டும், நான் இதற்கு சரியான ஆளா? என்று, இசையமைப்பதற்கு ஒரு மாஸ்+கிளாஸ்+குவாலிட்டி வேண்டும், அது என்னிடம் இல்லை,

 

5. பிடித்த இசையமைப்பாளர்?

எல்லோரையும் பிடிக்கும், தனி தனியாக எனக்கு சொல்ல தெரியாது, ஒவ்வொருத்தருக்கும் தனி ஸ்டைல் உண்டு, அதனால் அப்படி யாரையும் பிரித்து பார்த்து சொல்ல முடியவில்லை.

 

6. நடிப்பில் ஆசை இருக்கிறதா?

கண்டிப்பாக இல்லை, என் நண்பர்கள் நீ அழகாக இருக்கிறார் நடி என்று சொல்வார்கள், ஆனால் எனக்கு அதில் ஆர்வம் இல்லை, என் முழு கவனமும் இசை மீது தான் தற்போது உள்ளது,

 

7. உங்களை ஈர்த்த மனிதர்?

ஒருத்தரை என்னால் சொல்ல முடியாது, நிறைய பேர் இருக்கின்றனர். முதலில் என் பெற்றோர், சகோதரி, குருநாதர் என் அனைவரும் தான்.

 

8. இசையில் உங்களுக்கு பிடித்த ஜாம்பவான்கள்?

ஷங்கர் மகாதேவன் சார், ஸ்ரீனி சார், ஹரி ஹரன் சார், பாலு சார், ஜேசுதாஸ் சார்..இவர்கள் அனைவரையும் பிடிக்கும்.

 

9. அடுத்து வரும் படங்கள்?

பல படங்கள் இருக்கிறது …திருமணம் என்னும் நிக்கா, காக்கா குருவி, தாவணிக்காற்று, கொஞ்சம் காபி கொஞ்சம் காதல், வெப்பச்சலனம், அடித்தளம்..என நீண்ட வரிசை உள்ளது.

 

யாசின் இன்று போல் என்றும் அவரது பாடல்கள் வெற்றி அடைய “சினி உலகம்” சார்பாக வாழ்த்துகள்.

SHARE