கனடியர்கள் முதலீடுகளில் நாட்டம் காட்டுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாகவே இவ்வாறான ஓர் நிலைமை உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடியர்கள் மத்தியில், வரி மீளளிப்பு கொடுப்பனவுகளை முதலீடு செய்வது வெகுவாக குறைவடைந்துள்ளது.
கனடிய இம்பிரியல் வர்த்தக வங்கி முன்னெடுத்த கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
வரிச் செலுத்துகை மீளளிப்பு கொடுப்பனவு தொகையை முதலீடு செய்வது குறித்து வெறும் 10 வீதமான கனடியர்கள் மட்டுமே திட்டமிடுகின்றார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
கடன் செலுத்துகை, அத்தியாவசிய பொருள் கொள்வனவு போன்றவற்றுக்கு இவ்வாறு செலவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிகளவான கனடியர்கள் ஏனைய நுகர்வு செலவுகளுக்காக இந்த தொகையை செலவிட திட்டமிட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.