முதல் ஒருநாள் போட்டியில் செய்த அதே தவறை 2வது ஒருநாள் போட்டியிலும் செய்த சங்கக்காரா…

400
 

இலங்கை அணியின் நட்சத்திர வீரர் சங்கக்காரா முதல் ஒருநாள் போட்டியில் செய்த அதே தவறை 2வது ஒருநாள் போட்டியிலும் செய்தார்.

நேற்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 274 ஓட்டங்கள் குவித்தது. இந்த ஓட்டங்கள் இலக்கை நோக்கி இந்தியா துடுப்பெடுத்தாடியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக தவான், ரஹானே களமிறங்கினர். அணியின் ஓட்டங்கள் 18 என இருந்த போது, பிரசாத் வீசிய பந்தை ரஹானே எதிர்கொண்டார். அப்போது மட்டையில் பட்ட பந்து சங்கக்காராவுக்கு கேட்ச் ஆக சென்றது. ஆனால் சங்கக்காரா கையில் பட்டு பந்து எகிறியது.

இதனால் பின்பக்கம் ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த ஜெயவர்த்தனே, இந்த எகிறிய பந்தை தாவி பிடித்து சங்கக்காராவின் தவறை சரி செய்தார். இதன் காரணமாக ரஹானே 8 ஓட்டங்களில் வெளியேறினார்.

இதே போல் முதல் ஒருநாள் போட்டியில் சங்கக்காரா தவானின் கேட்சை விட அவர் சதம் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE