முத்தமிட்ட வாலிபரின் உதட்டை கவ்விய ஆமை!!

844

Kiss

சீனாவில் பியூஜியன் மாகாணத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் வீட்டில் செல்லமாக ஒரு ஆமை ஒன்றை வளர்த்து வந்தார். சம்பவத்தன்று வெளியே சென்ற அவர் ஆமையை தூக்கி அதை முத்தமிட்டு கொஞ்சினார்.

அப்போது, அந்த ஆமை எதிர்பாராதவிதமாக அவரது உதட்டை இறுக்கமாக கவ்வி கடித்து பிடித்துக் கொண்டது. அதில் இருந்து விடுபட முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை.

எனவே அவர் வைத்தியசாலைக்கு விரைந்தார். அங்கு டாக்டர்கள் ஒரு வழியாக ஆமையை சரிகட்டி உதட்டில் இருந்து விடுவித்தனர். ஆமை கடிதத்தில் வாலிபரின் உதட்டில் லேசான காயம் ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

SHARE