முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கு தமது கட்சியில் வேட்பு மனு வழங்கத் தயார் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

159
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கு தமது கட்சியில் வேட்பு மனு வழங்கத் தயார் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
CBK

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட விரும்பினால் சந்திரிக்கா ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட முடியும் என அமைச்சரும், கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவருமான லக்ஸ்மன் கிரயெல்ல தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைமையகம் சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவிற்கு எம்முடன் இணைந்து போட்டியிட வேண்டுமாயின் எவ்வித பிரச்சினையும் இல்லை, அதற்கான சந்தர்ப்பம் வழங்க முடியும்.

எமது கட்சியில் சந்திரிக்காவிற்கு வேட்பு மனு வழங்க முடியும்.

அரசியலில் நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை. பொதுவான எதிரியை வீழ்த்தவே எல்லா சந்தர்ப்பங்களிலும் கூட்டணி அமைக்கப்படுகிறது.

எங்களது கூட்டங்களுக்கு அதிகளவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களே வருகின்றனர்.

கடந்த மஹிந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை போலும் என லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

SHARE