முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பதவியில் இருந்த போது ஜனாதிபதி மாத்திரம் பயணம் மேற்கொள்ளும் உத்தியோகபூர்வ விமானம் ஒன்று இறக்குமதி செய்யப்படவிருந்தமை அம்பலத்திற்கு வந்துள்ளது.

333

 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பதவியில் இருந்த போது ஜனாதிபதி மாத்திரம் பயணம் மேற்கொள்ளும் உத்தியோகபூர்வ விமானம் ஒன்று இறக்குமதி செய்யப்படவிருந்தமை அம்பலத்திற்கு வந்துள்ளது.

எனினும் அந்த விமானம் இறக்குமதி செய்யப்படுவதை நிறுத்துவது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

208 கோடி ரூபா பெறுமதியான இந்த விமானம் ஜனாதிபதியின் பயணத்திற்காக இறக்குமதி செய்யப்படவிருந்தது. ஜனாதிபதியின் பயணங்களுக்காக விமானப்படைக்கு சொந்தமான விமானம் இருக்கும் நிலையில், பிரத்தியேகமாக இந்த விமானம் கொள்வனவு செய்யப்படவிருந்தது.

முன்னைய அரசாங்கத்தில் ராஜபக்ச குடும்பத்தினர், விமானங்களை பயன்படுத்துவது தொடர்பில் பரவலாக பேசப்பட்டது வந்தது. மக்களின் பணத்தை வீண் விரயம் செய்து நஷ்டத்தில் இயங்கும் விமான நிறுவனத்தை நடத்தியமை, குதிரை ஓட்ட செல்வதற்காக விமானத்தை பயன்படுத்தியமை, யோஷித்த ராஜபக்ஷவின் பொறுப்பில் இருந்து இலகு ரக விமானம் கண்டுப்பிடிக்கப்பட்டமை, சஜின்வாஸ் குணவர்தன விமானிகளுக்கு பயிற்சி வழங்கும் நிறுவனம் ஒன்றை நடத்தியமை, ராஜபக்ஷ குடும்பத்தினர் தமது பயணங்களுக்காக தனித்தனியாக விமானங்களை பயன்படுத்தியமை, மகிந்த ராஜபக்ச பயணங்களை மேற்கொள்ளும் போது இரண்டு விமானங்கள் செல்வது போன்ற விடயங்கள் தேர்தல் மேடைகளில் மாத்திரமல்லது ஊடகங்களிலும் பேசப்பட்டது.

இதனை தவிர கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, விமல் வீரவன்ஸ ஆகியோர் விமானப்படைக்கு சொந்தமான விமானங்களை பயன்படுத்தியதுடன் அதற்காக விமானப்படைக்கு 8 கோடி ரூபாவுக்கும் மேல் செலுத்த வேண்டியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன

SHARE