முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மஹர சிறைச்சாலையில்

404

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, 96 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்தமை தொடர்பில் மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவை இன்று சந்தித்து கலந்துரையாடினார்.

1426748017_8190134_hirunews_Mahara

 

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவை சந்திக்கும் பொருட்டே அவர் அங்கு சென்றுள்ளார்.

இதேவேளை, இரகசிய பொலிஸாரிடம் வாக்கு மூலமொன்றை அளிக்கச் சென்றிருந்த போது சரண குணவர்தன கைது செய்யப்பட்டுள்ளார்.

சிலாபத்தைச் சேர்ந்த வர்த்தகர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக சரணவிற்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒலி நாடா ஒன்றையும் குறித்த வர்த்தகர் ஆதாரமாக சமர்ப்பித்துள்ளார்.இந்த நிலையில் குறித்த கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE