முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச நிதி மோசடி விசாரணைப் பிரிவில் இன்று ஆஜராகியுள்ளார்.

311

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச நிதி மோசடி விசாரணைப் பிரிவில் இன்று ஆஜராகியுள்ளார்.

கடந்த வாரம் அனுப்பி வைக்கப்பட்ட அறிவிப்பு ஆணைக்கு அமைய அவர் இன்று விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

கால்டன் சிறிலியசவிய திட்டம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஷிரந்தி ராஜபக்சவை ஆஜராகுமாறு நிதி மோசடி விசாரணைப் பிரிவு அறிவித்திருந்தது.

ஷிரந்தி ராஜபக்ச வாக்குமூலம் வழங்குவதற்காக தனது கணவரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் பிரத்தியேக இடம் ஒன்றில் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகளை சந்திக்க புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச அரசியலில் ஈடுபடவில்லை எனவும் அதிகமாக குழந்தைகள் சம்பந்தமான மனிதாபிமான பணிகளில் அவர் கவனத்தை செலுத்தியதாகவும் ஷிரந்தியின் ஊடக இணைப்பாளர் அனோமா வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.

ஷிரந்தி ராஜபக்ச மேற்கொண்ட பணிகளுக்காக வெளிநாடுகளில் இருந்து நிதியுதவிகள் வழங்கப்பட்டதாகவும் அவர் வெளிப்படை தன்மையுடன் அதனை மேற்கொண்டு வந்ததாகவும் வெலிவிட்ட குறிப்பிட்டுள்ளார்.Sernte 02Sernte 03Sernte 04Sernte 05Sernte

SHARE