நாட்டின் திறைசேரியில் இருந்த தங்கத்தை விற்பனை செய்ய முயற்சித்தமை தொடர்பில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவி ஷாமலி பெரேரா இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
திறைசேரியில் இருக்கும் 100 கிலோ கிராம் தங்கம் 50 ஆயிரம் லட்சம் ரூபாவுக்கும் மோசடியான முறையில் விற்பனை செய்யப்பட உள்ளதாக தனது கணவர் கொழும்பு வடக்கு பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய போது, இராணுவ புலனாய்வு பிரிவினரிடம் இருந்து தகவல் கிடைத்தாகவும் ஷாமலி பெரேரா கூறியுள்ளார்.
இது குறித்து நடத்திய விசாரணையின் போது மகிந்த ராஜபக்ஷவின் மனைவியின் பெயரும் அதில் பேசப்பட்டது. இதனையடுத்து தனது கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதுடன் தனது மகனும் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் பற்றி எந்த தகவல்களையும் வெளியிடக் கூடாது என தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது எனவும் மீறி தகவல்களை வெளியிட்டால், தனது கணவருக்கு வெளியில் செல்ல இடமளிக்க போவதில்லை என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது எனவும் ஷாமலி பெரேரா தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.