முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஒத்துழைப்பு அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவராக கடமையாற்றி வரும் எனக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆதரவு அவசியம்.
அவ்வாறு ஆதரவளிக்க முடியாவிட்டால் மஹிந்த அரசியலை விட்டு விலகிக்கொள்ள வேண்டும்.
மஹிந்த ராஜபக்ச தனது பொறுப்புக்களை உதாசீனம் செய்ய மாட்டார் என நம்புகின்றேன்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சுதந்திரக் கட்சி ஒன்றிணைந்து செயற்படும்.
கட்சியை ஒன்றிணையச் செய்வதே எனது அடுத்த கட்ட இலக்கு என நிமால் சிறிபால டி சில்வா சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.