முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு வழங்கப்படக்கூடாது என வலியுறுத்தி நேற்றுக் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

139

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு வழங்கப்படக்கூடாது என வலியுறுத்தி நேற்றுக் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொழும்பு, புறக்கோட்டை மத்திய புகையிரத நிலையத்திற்கு முன்னால் கூடிய சில தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளன.

rasaggsgshhshshsh55211

மஹிந்த ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல்கள், மோசடிகள் தொடர்பில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர். அத்துடன், மக்களால் நிராகரிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் இனவாத பிரசாரங்களை ஆரம்பித்துள்ளார் என்று தொழிற்சங்க கூட்டணியினர் குற்றம்சாட்டினர். குடியுரிமை அமைப்புக்களும், தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE