முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மீண்டு அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்காக சீன அரசாங்கம் பாரிய அளவிலான அழுத்தம் கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

233

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மீண்டு அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்காக சீன அரசாங்கம் பாரிய அளவிலான அழுத்தம் கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

MahindaAiyya3A Make_My_Day_election_sri_Lanka_rajapaksa_brothers.jpg.w560h560

இது வரையிலும் சீனா தூதரக அலுவலகத்தின் இரண்டாம் அதிகாரியான அரசியல் பிரதானி ரேன் பாகியன் இந்நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது வரையில் அவர் ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் சிரேஷ்டர்களிடம் இது தொடர்பில் அழுத்தம் கொடுத்துள்ள நிலையில் மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் வியாபாரத்திற்காக சீனா அரசாங்கம் நிதியுதவி வழங்குவதற்கு ஆயத்தமாவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அவரினால் கடந்த பல மாதங்களினுள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையில் மோதலை ஏற்படுத்துவதற்காக போலியாக தகவல்கள் வழங்கி வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்தோடு அவருக்கு அரசியல் பிரதானிகள் பலருடனும் நெருக்கமான தொடர்பு காணப்பட்டுள்ளதாகவும், அவர் இதுவரையிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தை விமர்சித்துக்கொண்டுள்ளதோடு மஹிந்த ராஜபக்சவுக்காக சீனா தூதரக அலுவலக உதவியுடன் சிங்கள பத்திரிகை இரண்டு அச்சிட்டு பகிர்ந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மகிந்த ராஜபக்சவுக்கு பிரபல ராஜ யோகம் உள்ளதாக தகவல் உள்ளடக்கப்பட்ட சோதிட செய்தித்தாள் மற்றும் பரபரப்புச் செய்தித்தாள்களும் இதில் அடங்குகின்றன.

கடந்த மகிந்த ஆட்சி காலத்தில் இந்நாட்டு அபிவிருத்தி திட்டங்களுக்கு சீனா அரசாங்கம் ஏகபோக உரிமை கொண்டுள்ளதோடு இக்கொடுக்கல் வாங்கலின் போது ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களுக்கு பாரிய அளவிலான தரகு பணம் கிடைத்துள்ளதாகவும் பல்வேறு குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளது.

அத்தோடு இத்திட்டங்களுக்கு சீனா நிறுவனங்களுக்காக வழங்கப்பட்ட மதிப்பீடு செய்யப்பட்ட பணத்தை விட அதிக மதிப்பு கொண்டுள்ளதாகவும், சீன அரசாங்கத்தின் தலையீடுகள் நுட்பமாக இடம்பெறாமல் பிரச்சித்தமாக இடம்பெற்றமையினால் இலங்கையில் சீனா தூதருக்கும் இரண்டாம் அதிகாரிக்கும் இடையில் மோதல் நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அது இராஜதந்திரப் பிரச்சினை ஏற்படுத்துவதற்கு காரணமாகவிடும் என தூதர் அதிகாரிக்கு குற்றம் சுமத்தியுள்ளார்.

அவர் இந்த நடவடிக்கைகளுக்காக சீன வணிகர்களிடம் இருந்து பல்வேறு பிரதிபலன்களை பெற்றுக்கொண்டுள்ளதாக தற்போது வரையில் தகவல் வெளியாகியுள்ளது.

ராஜபக்சர்களுடன் இடம்பெற்ற நெருக்கமான தொடர்புகள் காரணமாக அவருக்கு நியமிக்கப்பட்ட சேவை காலங்கள் 03 வருடம் கடந்த 04 வருடமும் தூதரக அலுவலகத்தில் சேவையில் தொடர்வதற்கு சீனா அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

SHARE