முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக நுகேகொடையில் நடைபெற்ற கூட்டத்திற்கு 212 பேரூந்துகளில் மக்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

365

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக நுகேகொடையில் நடைபெற்ற கூட்டத்திற்கு 212 பேரூந்துகளில் மக்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் பதவி தேவையென்றால் அதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரடியாக கேட்கலாம்.

மஹிந்தவிற்கு பிரதமராக வேண்டுமானால் நுகேகொடையில் கூட்டம் நடத்த வேண்டியதில்லை.

212 பேரூந்துகளில் மக்களை அழைத்துச் செல்வதற்காக செலவிட வேண்டியதுமில்லை.

ஜனாதிபதியை சந்தித்து ஒர் வேண்டுகோள் விடுக்கலாம்.

நான் பிரதமராக இருக்கின்றேன். நீங்கள் ஜனாதிபதியாக ஆட்சி செய்யுங்கள் என மஹிந்த கோரியிருக்கலாம்.

இதனை விடவும் அதிகளவான மக்கள் ஜனாதிபதி தேர்தல் காலத்திலும் மஹிந்தவின் கூட்டங்களில் இருந்தார்கள் என ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மகிந்தவுக்கு பிரதமராக வேண்டுமானால் ஜனாதிபதி மைத்திரியிடம் கேட்கலாம் –ராஜித சேனாரத்ன

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் வேட்பாளராக வேண்டும் என்ற தேவை இருந்தால்இ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கோரிக்கை விடுக்க முடியும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மகிந்தவுக்கு பிரதமராக வேண்டும் என்றால், நுகேகொடையில் கூட்டத்தை நடத்த தேவையில்லை. 212 பஸ்களில் மக்களை கொண்டு வர பணத்தையும் செலவிடும் தேவையில்லை. ஜனாதிபதி சந்தித்து கோரிக்கை விடுத்தால் போதுமானது.

அவர் முன்னாள் ஜனாதிபதி என்பதால், நான் பிரதமராக இருக்கின்றேன். நீங்கள் ஜனாதிபதியாக இருங்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கூறினால் சரிதானே. நுகேகொடை கூட்டத்தை விட அதிகமான கூட்டம் ஜனாதிபதித் தேர்தல் சமயத்திலும் முன்னாள் ஜனாதிபதியின் கூட்டத்திற்கு வந்துள்ளது எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

SHARE