“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசில் அமைச்சர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், அரசியல் பிரதிநிதிகளாகவும் பதவி வகித்து தமிழர் விரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட வடக்கு, கிழக்கைச் சேர்ந்தோரை புதிய அரசில் எக்காரணம் கொண்டும் இணைத்துக்கொள்ள வேண்டாம்.” – இவ்வாறு புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வலியுத்தினார் என்று சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார். புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன, இரா.சம்பந்தன் எம்.பி. தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை முதன்முதலாக சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இதன்போதே ஜனாதிபதியிடம் கூட்டமைப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தனர். –