
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் ரக்னா லங்கா நிறுவனத்தின் ஆயுத களஞ்சியத்தை சோதனையிட நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டப சூழலில் இந்த ஆயுத களஞ்சியம் இயங்கி வந்ததுடன் அண்மையில் அது முத்திரை இடப்பட்டு முடப்பட்டது.
இந்த நிலையில், அந்த ஆயுத களஞ்சியத்தை சோதனையிட நீதிமன்றம் இன்று பொலிஸாருக்கு அனுமதி வழங்கியது.
கறுவாத் தோட்ட பொலிஸார் விடுத்த வேண்டுகோளை ஏற்று கொழும்பு பிரதான நீதவான் கியான் பிலப்பிட்டிய இந்த அனுமதியை வழங்கினார்.
கோட்டே மாநகர சபை உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸார் அண்மையில் ஆயுத களஞ்சியத்தை முற்றுகையிட்டு சோதனையிட்டனர்.
அங்கு ஆயுதங்களுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உருவங்கள் பொறிக்கப்பட்ட பல்வேறு பொருட்களும் இருந்தன.
பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் விசேட தேடுதல் நடவடிக்கை!
காலி துறைமுகத்தில் இருந்து பெருமளவு ஆயுதங்கள் கண்டுபிடிப்பு! மிதக்கும் ஆயுதக் களஞ்சியமாம்!