முன்னாள் போராளிகளை வேட்பாளர்களாக ஏற்றுக்கொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு மறுப்பு

210

 

TNA and vithyஜனநாயகப் போராளிகள் என்ற புதிய கட்சியை ஆரம்பித்துள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு வெற்றியளிக்கவில்லை என அந்தப் புதிய கட்சியின் ஒருங்கிணைப்பாளராகிய ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரன் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் வித்தியாதரன் தலைமையில் முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று முற்பகல் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கும் விருப்பம் தெரிவித்து, அதனைத் தமது கோரிக்கைகளாக இந்தச் சந்திப்பின்போது முன்வைத்ததாக வித்தியாதரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

எனினும் இப்போதைய அரசியல் சூழலில் முன்னாள் விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்படுவது தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு நெருக்கடியைக் கொடுக்கும் என கூறி தமது கோரிக்கைகளை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என வித்யாதரன் கூறினார்.

unnamed (23) unnamed (24) unnamed (25)

 

 

SHARE