முன்னாள் போராளிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வேட்புமனுக்களை கோருகின்றனர்!

182

 

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள், தமக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பொதுத்தேர்தல் வேட்புமனுக்கள் வழங்கப்படவேண்டு;ம் என்று கோரியுள்ளனர்

ltte-20131104-1

கடந்த வெள்ளிக்கிழமையன்று வடக்கு கிழக்கில் இருந்து சென்ற முன்னாள் போராளிகள் நல்லூர் கந்தசாமி கோயில் அருகில் கூடி சத்தியபிரமாணத்தை மேற்கொண்டனர்.

இதன்போது (‘Crusaders for Democracy’ ) ஜனநாயக போராளிகள் என்ற பெயரில் இயங்க அவர்கள் தீர்மானித்தனர்.

இந்தநிலையில் சிடிஎப் என்ற குறும் வார்த்தைகளால் அழைக்கப்படும் இந்த கட்சியினர், தமக்கு வடக்கு கிழக்கில் இரண்டு வேட்புமனுக்கள் வழங்கப்படவேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் விண்ணப்பித்துள்ளதாக அதன் இணைப்பாளர் நடேசபிள்ளை வித்தியாதரன் தெரிவித்துள்ளார்

SHARE