கடந்த பல வாரங்களாக ஆளுங்கட்சி எதிர்த்தரப்பிற்கும், எதிர்க்கட்சி ஆளுந்தரப்பிற்கும் கட்சி மாறிக்கொண்டிருக்கும் சமயம் சிறுபான்மை இனத்திற்காக தனது பதவியினைத் தூக்கியெறிந்து இன்று பொதுக்கூட்டமைப்புடன் கௌரவ முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் இணைந்துகொண்டிருப்பது சிறுபான்மைச் சமுதாயமே பெருமைப்பட வேண்டியதொரு விடயம்.
அரச தரப்பிலும் எதிர்த்தரப்பிலும் அமைச்சர் தொடர்பாக பல்வேறுவிதமான கருத்து முரண்பாடுகள் நிலவிய போதிலும் சுயநலம் பாராது மக்கள் சேவையினை தனது சேவையாகக் கருதி, பொதுபலசேனா போன்ற சிங்கள இனவாதக்கட்சிகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற காரணத்தினாலும் அக்கட்சியில் இருந்து வெளியேறியுள்ளார். இவருக்கு முஸ்லீம் மக்கள் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார்.