EWS ARTICLES
முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி போராளிகளுக்கு உரிய வகையில் அரசாங்கம் புனர்வாழ்வு அளிக்கவில்லை என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். உரிய முறையில் புனர்வாழ்வு அளிக்கப்படாத சில முன்னாள் போராளிகளே மீண்டும் ஈழ இராச்சிய கொள்கைகளை பின்பற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்காக வெளிநாடுகளிடமிருந்து பாரியளவில் நிதி உதவி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அந்தப் பணம் உரிய வகையில் பயன்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் உயர் பதவிகளை வகித்து வருவரே இவ்வாறு பணத்தை துஸ்பிரயோகம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் உரிய முறையில் புனர்வாழ்வு அளிக்கும் பணிகளை மேற்கொள்ளாத காரணத்தினால் , மீண்டும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீள ஒருங்கிணைய திட்டமிடுவதாகத் தெரிவித்துள்ளார். வடக்கில் உரிய முறையில் நல்லிணக்க முனைப்புக்கள் மேற்கொள்ளப்படாமையும் புலிகள் மீள ஒருங்கிணைய முயற்சிப்பதற்கான முக்கியமான ஏதுவெனக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் பணத்தை கொள்ளையிட்டு;ளளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். தேர்தல் காலங்களில் அரசாங்கம் இனவாதத்தை தூண்டி வாக்க வேட்டையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு தேர்தல்களின் போதும் தெற்கில் சிங்கள பௌத்த இன, மதவாதத்தை தூண்டி அரசாங்கம் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.