முன்னைய அரசாங்கத்தின் கீழ் ஏற்பட்ட அச்சம் காரணமாக வெளிநாடுகளுக்கு தப்பியோடிய பத்திரிகையாளர்கள் பலர் ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாடு திரும்புவதற்கு தீர்மானித்துள்ளனர். இலங்கையில் ஊடக சுதந்திரம் நிலைநாட்டப்படும் என புதிய அரசாங்கம் அளித்துள்ள உறுதிமொழியை தொடர்ந்து இவர்கள் நாடு திரும்பித் தமது பணிகளை ஆரம்பிப்பது குறித்து விருப்பம் வெளியிட்டுள்ளனர். ‘சண்டே லீடர்’ பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் பிரட்றிக்கா ஜேன்ஸ், ‘தி நேசனின்’ பிரதி ஆசிரியர் கீத்நொயர் உட்பட பல பத்திரிகையாளர்கள் கடந்த ஆட்சியின் போது அச்சம் காரணமாக நாட்டிலிருந்து வெளியேறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் ஊடக சுதந்திரம் முன்னேற்றமடையும் என்ற வாக்குறுதியை பல சர்வதேச ஊடக அமைப்புகள் வரவேற்றுள்ளன