முன்னைய அரசாங்கத்திலிருந்து விலகி பொது எதிரணி சார்பாகப் போட்டியிட்டு இலங்கையின் 6 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன, நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தலதா மளிகையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 8 மணிக்கு சுதந்திர சதுக்கத்திலிருந்து கார் பவனியாக அத்தனகலவுக்கு ஜனாதிபதி புறப்படுவார். அங்கு, பண்டாரநாயக்கவின் நினைவுச் சின்னத்துக்கு அஞ்சலி செலுத்துவார். தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு தலதா மாளிகையைச் சென்றடைவார். அங்கிருந்து பிற்பகல் 2 மணிக்கு அவர் நாட்டுமக்களுக்கு உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.