– வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி.சி.சிவமோகன் அவர்கள் தலைமையில்
நடைபெற்றது.
வன்னி குறோஸ் சுகாதாரநிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் மாபெரும்விழாவாகமுன்பள்ளி மற்றும்
அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு பெருவிழா தமிழ்தேசியகூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர்கௌரவ
வைத்தியகலாநிதி திரு னுச.சி.சிவமோகன் அவர்களின் தலைமையில் 13.12.2014 சனிக்கிழமை காலை 8 மணிக்கு ஆரம்பமாகியது. இதில்
கௌரவிப்பு ஆசிரியர்கள்,மக்கள்,விழா விருந்தினர்கள் கலந்து கொண்டனர். முதன்மை விருந்தினர்களாக
யாழ்மாவட்டபாராளுமன்றஉறுப்பினர்கள் கௌரவ திரு.க.சுரேஸ்பிரேமச்சந்திரன், கௌரவ திரு.சிவசக்திஆனந்தன்,
வடமாகாணகல்விபண்பாட்டு அலுவல்கள்அமைச்சர் கௌரவ திருத.குருகுலராஜா கலந்து சிறப்பித்ததுடன்; சிறப்பு விருந்தினர்களாக
வடமாகாணசபை உறுப்பினர் கௌரவ மேரிகலா குணசீலனும் கௌரவ விருந்தினர்களாக முல்லைவலயம்முன்பள்ளி
உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு வே.ஜெயம் சபாபதி திருமு.குகதாசன்திரு ளு.P.செல்க்குட்டி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
பாரம்பரிய கலைகலாச்சார நிகழ்வுகளுடன் சிலாவத்தை அம்மன்கோயில் முன்றலில் இருந்து பேரணி
ஆரம்பமாகியது குறிப்பிடத்தக்கது. இதில் இனியம்-முல்லைத்தீவு மகாவித்தியாலயமாணவர்களும் குதிரையாட்டம்-
ஒட்டிசுட்டான்கலைஞர்களும், ஆனந்தக்காவடி-குமுழமுனை மற்றும் முள்ளியவளை கலைஞர்களும், குடமூதல்-குமுழமுனை கலைஞர்களும், கும்மி-
பாடசாலை மாணவர்களும், கரகாட்டம் -முள்ளியவளை முருகுப்பிள்ளை அவர்களும் கோலாட்டம்- பாடசாலைமாணவர்களும், பாண்ட்வாத்திய
அணிவகுப்பு-முன்பள்ளி சிறுவர்களும் நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.
கலைநிகழ்வுகளாக முன்பள்ளி ஆசிரியர்களின் கலைநிகழ்வு நடைபெற்றது.பின் முதன்மை விருந்தினர்கள் உரையும்
நடைபெற்ற பின் விழாவின் மையநிகழ்வாக வன்னி குறோஸ் சுகாதாரநிறுவனம் அனுசரனையுடன் முன்பள்ளி மற்றும்
அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.
மேலும் வடமாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி னுச.திரு.சி.சிவமோகன் அவர்களினூடாக வடமாகாணசபை
நிதியத்திலிருந்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு தொகுதி துவிச்சக்கர வண்டி வழங்கப்பட்டதுடன் சமூகதொண்டர்களுக்கான சுயதொழில்
ஆரம்பிப்பதற்கான ஒரு தொகுதி துவிச்சக்கர வண்டிகளும் வழங்கப்பட்டன.அத்துடன் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல்
உபகரணங்களும் அன்பளிப்புச் செய்யப்பட்டதுடன் கருவாடு பதனிடுதல் போன்ற சிறுnhழில் ஊக்குவிப்புக்களும் பயனாளிகளுக்கு
வழங்கப்பட்டமைளுடன் விளையாட்டுக்கழகங்களுக்கு உதவிகளும் வழங்கப்பட்டதுடன் வன்னிகுறோஸ் சுகாதார நிறுவனத்தால்
முன்பள்ளிஆசிரியர்களுக்கு கௌரவிப்பு பரிசில்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
வடமாகணசபைஉறுப்பினர் வைத்தியகலாநிதி திரு.சி.சிவமோகன் அவர்கள் குறிப்பிடுகையில்
எம் நாட்டில் இன்று தமிழனிடம் எஞ்சியிருப்பது அவன் அறிவும் சிறிதளவு தன்மானமும்தான் இருப்பிடம் விட்டு
துரத்தியடிக்கப்பட்டு முட்கம்பிகளுக்குள் அடைக்கப்பட்டு மீள்குடியேற்றம் என்ற பெயரில் வாழ்வாதார வழியின்றி
கைவிடப்பட்டுள்ளான். ராணுவத்திடமும் சிங்கள குடியேற்றத்திடமும் எம் பாட்டன் பூட்டன் நிலங்கள் பறிபோகின்றன. ஆனாலும்
கல்வியும் தன்மானமுமே இன்று எஞ்சியுள்ளதைக்காணலாம். போர்க்காலங்களிலும் எம் கல்வியை பஞ்சு விளக்கில் தக்கவைத்துக்கொண்டதை
யாரும் அவளவு எளிதில் மறந்து விட முடியாது. அத்தகைய கல்வி வளத்துக்கு அத்திவாரம் இடும் இந்த முன்பள்ளி ஆசிரியர்களை
கௌரவிப்பது என்பது நம் அனைவரினது கடமை மாத்திரம் இன்றி கட்டாயமும் ஆகும்.
இந்த வகையில் நாம் இன்று இம்; முன்பள்ளி ஆசிரியர்களை கௌரவிக்க இப்பெருவிழாவினை ஏற்பாடு செய்துள்ளோம்.
ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுபவர்கள் என்பதற்கு நிரந்தர வேதனமின்றி கொடுக்கப்படும் சிறிதளவு ஊதியத்துடன்
பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இன்றைய பாலகர்களுக்கு கல்வியினை அத்திவாரம் இடுகிறார்கள். ஆரம்பத்திலேயே
சிறுவர்களது உடல்,உள வளர்ச்சியில் இவர்கள் சிறந்த பங்களிப்பினை ஆற்றுகிறார்கள். சிறார்களின் உடல்,உளத்தேவையறிந்து
அவர்களின் எண்ணங்கள் யாவற்றையும் பூர்த்தி செய்து அவர்களின் வயது மட்டத்துக்க இறங்கி அவர்களுடன் விளையாடி அதனூடாக அவர்களும்
அறியாது கல்வியை வழங்குகின்றார்கள்.
இத்தகையவர்களுக்கு எதிர்காலத்தில் அரச நியமனம் முறைப்படி வழங்கி இவர்களுக்;கும் நிரந்தர ஊதியம் மற்றும்
ஓய்வூதியம் பெறுவதற்கும் வழியமைக்கவேண்டும். பின் தங்கிய பிரதேசத்தில் பின் தங்கிய மக்களிடம் உலக ஓட்டத்துடனான கல்வியை
வழங்குவதில் இவர்கள் எத்தனை சிரத்தை எடுக்கிறார்கள் என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அரச பாடசாலைகளில் உள்ள
வேலைத்திட்டம் பாடத்திட்டம் போன்று இவர்களுக்கும் அவையெல்லாம் உண்டு. வருடாவருடம் விளையாட்டுப்போட்டீகள், வருடாவருடம் கலை
நிகழ்வுகள் என சிறார்களின் இணைபாட செயற்பாடுகளிலும் சிரத்தையுடனும் ஆர்வத்துடனும் பங்களிப்பினை இவர்கள் செய்கின்றார்கள்.
இன்று மாவட்டம் மாகாணம் மற்றும் தேசிய மட்டம்வரை இப்பிரதேசத்து மாணவர்கள் சிறந்து விளங்குவதைப் பிரமிப்போடு
பார்க்கின்றோம். இதற்கெல்லாம் தகுந்த அத்திவாரம் இடுபவர்களை ஏற்றிவிடும் ஏணிகளை நாங்கள் கவனத்தில் கொள்வதில்லை என்பது
வேதனைக்குரியாகும்.
இத்தகைய எண்ண ஓட்டங்களுக்குசெயல் வடிவம் கொடுக்க இன்று வன்னி குறோஸ் சுகாதாரநிறுவனத்தின் ஒழுங்கமைப்புடன் இத்தகைய விழாவை இங்கு
கொண்டாடிக்கொண்டுள்ளோம். இன்னும் பல தேவைகளை நிறைவுசெய்ய ஆசைப்படுகின்றோம். எனினும் வடமாகாண சபையின் உறுப்பினர்
என்ற வகையில் ஒரு எல்லை வரைதான் செய்யமுடிகின்றது.வடமாகாணசபையின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டவை என்பது உங்களுக்கு
தெரியும். எனினும் எம்மால் முடிந்த அளவில் உங்களுக்கு உதவக்கூடிய எல்லா முயற்சிகளையும் மேற்கோள்வோம் எனகூறிக்
கொள்கின்றேன். எனக்குறிப்பிட்டார்.
TPN NEWS