மும்பையில் மிகவும் விலையுயர்ந்த பகுதியில் பிளாட் வாங்கிய ஜெய்ஸ்வால்., விலை என்ன தெரியுமா?

38

 

இந்தியா கிரிக்கெட் அணியின் பேட்டிங் சென்சேஷன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மும்பையின் விலையுயர்ந்த பகுதியில் வீடு வாங்கியுள்ளார்.

சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எளிதாக இரட்டை சதங்கள் அடித்து வரும் இந்த இளம் பேட்ஸ்மேன், மும்பையின் மிகவும் விலையுயர்ந்த பாந்த்ரா ஈஸ்ட் பகுதியில் புதிய பிளாட் ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த குடியிருப்பின் மதிப்பு சுமார் ரூ. 5.38 கோடியாக இருக்கும் என்று தெரிகிறது.

பாந்த்ரா கிழக்கில் உள்ள பிகேசி திட்டத்தில் (BKC project in Bandra East) அதிநவீன வசதிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கடந்த மாதம்தான் அவரது பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பானிபூரி விற்று தன்னை கிரிக்கெட் வீரராக மாற போராடிய பெற்றோருக்காக, ஜெய்ஸ்வால் சமீபத்தில் தானேயில் உள்ள 1500 சதுர அடி கொண்ட ஐந்து படுக்கையறை சொகுசு பிளாட்டுக்கு மாறிய செய்திகள் வெளிவந்தன.

இப்போது, மும்பையில் தொழிலதிபர்கள், பணக்காரர்கள், பிரபலங்கள் என ஏராளமானோர் வசிக்கும் பாந்த்ரா பகுதியில் பிளாட் ஒன்றை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டம் மிகவும் மேம்பட்ட நிலையில் கட்டப்பட்டு ஐந்து ஏக்கர் பரப்பளவில் உள்ளது.

பாந்த்ரா ரயில் நிலையத்திற்கு மிக அருகில் மற்றும் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 8.7 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த திட்டம் சுமார் பத்து கோபுரங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பும் 22 மாடிகள் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் 2, 3 மற்றும் 4 BHK அடுக்குமாடி குடியிருப்புகளில் கிடைக்கின்றன, மேலும் 3 BHK பிளாட்டின் விலை சுமார் ரூ. 6 கோடி என்று நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

SHARE