மும்பை அணியில் இருந்து விலகும் அதிரடி ஆட்டக்காரர் ஷர்பராஸ்கான்

188
ஐ.பி.எல் போட்டியில் கலக்கிய அதிரடி ஆட்டக்காரர் ஷர்பராஸ்கான் மும்பை அணியில் இருந்து விலகி உத்திரபிரதேச அணிக்காக விளையாட முடிவு செய்துள்ளார்.மும்பை அணியை சேர்ந்த ஹிஹென் ஷா சூதாட்ட விவகாரத்தில் தடை விதிக்கப்பட்ட நிலையில் மும்பை அணிக்கு இது மற்றொரு பின்னடைவாக கருதப்படுகிறது.இந்நிலையில், ஷர்பாராஸ்கான் தனது தந்தையுடன் சென்று மும்பை கிரிக்கெட் சங்கச்செயலாளர் பிவி ஷெட்டியை சந்தித்து இந்த முடிவை தெரிவித்துள்ளார்.ஆனால், ஷெட்டி எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவர்கள் கேட்கவில்லை.

உத்திரபிரதேசத்துக்காக எனது மகன் விளையாட முடிவெடுத்ததில் எந்த அரசியலும் உள்நோக்கமும் இல்லை. இதுவரை எங்களுக்கு ஆதரவளித்த மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஷர்பாராஸ்கானின் தந்தை கூறியுள்ளார்.

மேலும், உத்திரபிரதேச மாநில கிரிக்கெட் சங்கத் தலைவர் ராஜீவ் சுக்லாவுடன் இது குறித்து பேசினேன். அவர் ஆர்வத்துடன் வரவேற்றார் என்று தெரிவித்துள்ளார்.

SHARE