முற்றுமுழுதாக மின்சக்தியில் இயங்கும் உலகின் முதலாவது செயற்கைக்கோள்……..

399

ABS–3A எனும் செயற்கைக் கோள் ஆனது முற்றுமுழுதாக மின் சக்தியில் இயங்கக்கூடிய உலகின் முதலாவது செயற்கைக்கோள் என Boeing நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த செயற்கைக்கோள் ஆனது பேர்முடாவை தளமாகக் கொண்டுள்ள செயற்கைக்கோள் வலையமைப்பின் ஊடாக இயக்கப்படவுள்ளதுடன், தொலைக்காட்சி, இணையம் மற்றும் தொலைபேசி சேவை என்பவற்றினை உலகெங்கும் வழங்குவதற்கு பயன்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை முன்னைய செயற்கைக் கோள்கள் அனைத்தும் பெரும்பாலும் இரசாயன சக்தியில் இயங்கக் கூடியவையாகவும், அவற்றில் பகுதியாகவே மின் சக்தி பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த செயற்கைக் கோள் ஆனது செனன் அயனை ( Xenon-Ion) அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் மின் சக்தியல் இயங்கக்கூடியதாக இருப்பதுடன், இது இரசாயன சக்தியில் இயங்கும் செயற்கைக் கோள்களை விட 1000 மடங்கு வினைத்திறன் வாய்ந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE