முல்லைத்தீவில் கடைகள் உடைத்து நுட்பமான முறையில் கொள்ளை. நள்ளிரவில் பயங்கரம்.

367

முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் பல்பொருள் வணிகக்கடை ஒன்றும் கடற்றொழில் உபகரண வணிகக்கடை ஒன்றும் நேற்றிரவு கொள்ளையிடப்பட்டுள்ளது.
நா.சிவலோகநாதன் என்பவருக்கு சொந்தமான பல்பொருள் வாணிபத்தில்  மேற்கொள்ளப்பட்ட கொள்ளைச்சம்பவத்தின் போது சுமார் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட பெறுமதியுள்ள பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளதாக அறியவருகிறது.
மேற்படி சம்பவத்தை வடமாகாணசபைஉறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில் சென்று உறுதிப்படுத்தினார். இதேவேளை முல்லைத்தீவு பொலிசாரும் நேரில் பார்வையிட்டுச்சென்றுள்ளனர்.
சில வாரங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கருவேலங்கண்டல் பகுதியில் பிரபல தமிழ் ஒப்பந்தக்காரர் ஒருவரின் வீட்டில் கொலை கொள்ளை முயற்சி பொலிசார் ஒருவரின் துணையுடன் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் நேற்றைய இச்சம்பவம் மக்களுக்கு அச்சத்தை தோற்றுவித்துள்ளது. கூரிய ஆயுதங்களின் உதவியுடன் பல கொள்ளையாளர்கள் வாகன உதவியுடன் மேற்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்ப்படும் இச்சம்பவம் பல கேள்விகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருப்பதாக இரவிகரன் தெரிவித்தார்.
முற்றிலும் இராணுவ புலனாய்வாளர்கள் மற்றும் பொலிசார் கண்காணிப்பில் உள்ள முல்லைத்தீவில் வாகனங்களைப்பயன்படுத்தி ஒரு திருட்டுச்சம்பவம் எப்படி முன்னெடுக்கப்படுகிறது என்று பொது மக்கள் கேள்வியெழுப்பி உள்ளனர்.
இதேவேளை விடுதலைப்புலிகளின் நிர்வாகத்தின் போது இப்படியான நிகழ்வுகள் தலையெடுக்கவில்லை என்று அங்கு கூடியிருந்தோரில் ஒரு பெண் தெரிவித்திருந்தார்.
ஒரேயிரவில் இரண்டு கடைகள் உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் அப்பகுதி வாழ் மக்களிடையே சற்று பதற்ற நிலையை தோற்றுவித்துள்ளது.

 

SHARE