முல்லைத்தீவில் தொடரும் சிவில் பாதுகாப்பு பிரிவின் மக்கள் விரோத செயற்பாடுகள். நல்லாட்சிக்கு இவை தேவைதானா? வைத்திய கலாநிதி சி.சிவமோகன் கேள்வி.

354

 

யாழ் மருத்துவ  சங்கத்தின் பூரண ஆதரவுடன் 09.05.2015 சனிக்கிழமை அன்று முல்லைத்தீவு மாவட்டம் கோட்டை கட்டிய குளத்தில் உள்ள அ.த.க பாடசாலையில் இலவச மருத்துவ முகாம் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினரும் வைத்திய கலாநிதியுமான சி;.சிவமோகன் வைத்திய கலாநிதி வ.முரளி ( வைத்திய நிபுணர் சுகாதார அமைச்சு), யாழ் மருத்துவ சங்க அங்கத்துவ டாக்டர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் சிவில் பாதுகாப்பு பிரிவினர் சிகிச்சை பெற வந்த நோயாளிகளை  தடுத்தும் மிரட்டியும் குறித்த நிகழ்விற்கு பெரும் இடையூறு விளைவித்திருந்தனர். இவர்களின் இடையூறுகளுக்கு மத்தியிலும் 150 ற்கு மேற்பட்ட நோயாளிகள் கலந்து கொண்டு தங்களது நோய்களிற்கேற்ற சிகிச்சையினை பெற்றுக் கொண்டனர். இவ்வாறான தொடரும் சிவில் பாதுகாப்பு பிரிவின் மக்கள் விரோத செயற்பாடுகள் நல்லாட்சிக்கு தேவைதானா என  வைத்திய கலாநிதி சி.சிவமோகன் கேள்வி எழுப்பியதுடன் அவர்களுடன் நேரடி வாக்கு வாதத்திலும் ஈடுபட்டார்.

unnamed (4) unnamed (5) unnamed (6) unnamed (7)

SHARE