முல்லை கடல் வளங்களை சூறையாடும் பூதங்கள் ஆதாரத்துடன் வெளிப்படுத்தினார் வைத்திய கலாநிதி சி. சிவமோகன்

401

 

 

05.06.2015 அன்று வெள்ளிக்கிழமை திடீரென சாலை கடற்கரைக்கு சென்றார் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி
சி. சிவமோகன்.  அங்கு சட்டவிரோதமான முறையில் சங்கு அள்ளுதல், இரவில் அளவு வேறுபாடின்றி அட்டை அள்ளுதல் போன்ற கடல் வளங்களை சூறையாடும் கூட்டங்களை சந்தித்தார்.
unnamed (19) unnamed (20) unnamed (21) unnamed (22) unnamed (23) unnamed (24) unnamed (25)
ஐந்நூறுக்கும் மேற்பட்ட இயந்திரங்கள் பூட்டிய வள்ளங்களில் பல ஆயிரக்கணக்கான சட்ட  விரோத தொழில் செய்பவர்கள் சாலைக் கடற்கரையை ஆக்கிரமித்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது. இரவில் கடல் அட்டைகள் பிடிக்க முடியாது மேலும் 18 கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் சென்றுதான் மேற்படி கடல் அட்டை பிடிப்பதை படகில் செய்யவேண்டும் என்பது நியதி.
ஆனால் இவர்கள் இரவில் ஒளி பாச்சி அளவு வேறுபாடின்றி அட்டைகள், உயிர் சங்குகளை சட்டவிரேதாமாக அள்ளுவதால் எமது கடல் வளம் மோசமாக பாதிக்கப்படுகிறது. அதுவும் பலநூறு வள்ளங்களில் தினசரி மேற்படி சூறையாடல் எவருக்கும் பயமின்றி நடைபெற்று வருகிறது.
இதனால் சாலை முதல் முல்லைத்தீவு வரை பல்லாயிரக்கணக்கான மீன் பிடி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அன்றாடம் சாப்பாட்டுக்கே மீன் பிடிபடாதபோது எப்படி வாழ்க்கையை கொண்டு செல்வது என்று பரிதவிக்கிறார்கள்.
இரவில் ஒளி பாச்சி பல்லாயிரக்கணக்கான சிலின்டர் பூட்டப்பட்ட அட்டை அள்ளுபவர்கள் கடலில் இறங்குவதால் மீன்கள் கரைக்கு வருவதில்லை. மேலும் உயிர் சங்குகள் அள்ளப்படுவதால் அதன்மேல் உள்ள சளிபோன்ற பதார்தத்தை உண்ணவரும் மீன்களும் வருவதில்லை.
தமது சிறுகடல் தொழிலுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்து எமது தமிழ் மக்களை நீதிமன்றம் மூலம் நடு வீதிக்கு கொண்டுவரும் மீன்பிடி திணைக்கள அதிகாரிகளின் கண்களுக்கு பூதங்கள் போல் எமது கடல் வளங்களை சட்டவிரோதமாக அள்ளி வருவது தெரிவதில்லையா.
தொடரும் அரசியல் பின்னணிகளுடன் செயல்படும் இவர்கள் சட்டவிரோதமாக கோடி கோடிகளாக உழைத்துக் கொண்டிருக்க எமது மீனவர்களோ அன்றாட பிழைப்புக்கே நாதியற்று வாழ்கிறார்கள்.
இந்த சட்ட விரோதிகளை உடனடியாக முல்லை மண்ணில் இருந்து அகற்ற உரியவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். தவறும் பட்சத்தில் எமது கடல் வளத்தை நாம் பாதுகாக்க ஆயிரக்கணக்கில் மக்கள் கடலில் இறங்க நேரிடும்.
யுத்தத்தை சாட்டாக வைத்து எமது இனத்தை முள்ளிவாய்க்கால் கடலில் புதைத்தது காணாது என்று இன்று எமது கடல் வளத்தை அழித்து எமது மக்களை வாழ உணவின்றி பட்டினி போட்டு தாக்க முற்படுகிறதா இந்த பேரினவாதம். கடல் வளம் மத்திய அரசுக்கு சொந்தமானது என்று கூறிக்கொண்டு எமது வாழ்வாதாரத்தை சுரண்டும் கூட்டத்தை நாம் அனுமதிக்க முடியாது என கூறினார்
SHARE