முள்ளிவாய்காலில் மட்டும் அல்ல இலங்கையில் எப்பாகத்திலும் அஞ்சலிக்கு தடை

923

Screen-Shot-2013-09-28-at-3.54.54-PM
தெற்கில் மாபெரும் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களுக்காக அரசாங்கம் தயாராகழ வருகிறது. இதற்காக பாரிய பிரசாரங்களையும் விளம்பரங்களையும் இலங்கை அசு மேற்கொண்டு வரகிறது.

இதேவேளை வடக்கு கிழக்கில் போரில் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்த இலங்கை அரசு தடைவிதித்து அச்சுறுத்தி வருகின்றது.

இறந்த மக்களை நினைவுகூர்ந்தால் அது புலிகளை பெருமைப்படுத்தும் நிகழ்வாக அமையும் என்றும் இலங்கை இராணுவத்தரப்பு கூறியுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெற்றியீட்டியமை தொடர்பான கொண்டாட்ட நிகழ்வுகள் இந்த முறை மாத்தறையில் நடைபெற விடயம் குறித்து மாத்தறை வலயக் கல்விப் பணிப்பாளர் ரோஹண நாணயக்கார, வலயப் பாடசாலை அதிபர்களுக்கு கடிதம் ஊடாக அறிவித்துள்ளார்.

வெசாக் பெளர்ணமி தினத்தை முன்னிட்டு இரண்டு நாள்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி வலயப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எனவே பாடசாலை மூடப்படும் நாள்களுக்கு, பதிலீடாக எதிர்வரும் வாரங்களில் சனிக்கிழமை நாள்களில் பாடசாலை நடத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தெற்கில் போர்வெற்றி நினைவுக் கொண்டாட்டங்கள் இடம்பெறும் வேளையில் வடக்குக் கிழக்கில் போரில் இழந்த மக்களை எவ்வாறு நினைவுகூறுவது என்று தமிழ் மக்கள் அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றனர்.

SHARE