முள்ளிவாய்க்காலிலும் தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறல் நடவடிக்கை… ரவிகரன் தலையீட்டில் முறியடிக்கப்பட்டது.

399

 

முள்ளிவாய்க்கால் பகுதியில் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல் நடவடிக்கை வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களின் தலையீட்டில்  முறியடிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சட்டவிரோதமான முறையில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த தென்னிலங்கை மீனவர்கள், தமது நடவடிக்கைகளை முள்ளிவாய்க்காலிலும் தொடக்கிய நிலையில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களின் நேரடி எச்சரிக்கையை அடுத்து வெளியேறியுள்ளனர்.
unnamed (11) unnamed (12) unnamed (13) unnamed (14) unnamed (15) unnamed (16)
இது பற்றி மேலும் தெரியவருவதாவது
கரைவலைத் தொழிலுக்குரிய அனுமதியைப் பெற்று முள்ளிவாய்க்கால் வந்த தென்னிலங்கையைச் சேர்ந்த சுரங்க என்பவர்,ஏனைய தென்னிலங்கை மீனவர்களின் படகுகள் தெப்பம் ஆகியவற்றுடன் சூடைவலைத் தொழில் எனப்படும் சிறு தொழிலையும் ஆரம்பித்திருந்தார். சட்டவிரோதமாக படகுகள் தெப்பங்களுடன் முன்னெடுக்கப்பட்ட இந்த தொழில் நடவடிக்கையால் அதிருப்தியுற்ற முள்ளி வாய்க்கால் பகுதி தமிழ் மீனவர்களின் நெய்தல் முள்ளி வாய்க்கால் கிழக்கு கடல் தொழில் சங்கத்தினர் இதைத் தடுத்து நிறுத்த எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. முள்ளிவாய்க்கால் கப்பலடிப்பகுதியில் நிலை கொண்டிருந்த ராணுவத்தினர் பிரசன்னத்தின் சாதகமான சூழலுடன் தென்னிலங்கை மீனவர்கள்,தமிழ் மீனவர்களின் எதிர்ப்பின் மத்தியிலும்  தொடர்ச்சியாக தமது சட்ட விரோத நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதையடுத்து நெய்தல் முள்ளி வாய்க்கால் கிழக்கு கடற்றொழில் சங்கத்தினர் , வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனை தொடர்பு கொண்டு மேற்படி நிலை தொடர்பில் முறையிட்டனர்.உடனே முள்ளி வாய்க்கால் கப்பலடிக்கு விரைந்த வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் சம்பவ இடத்தில் சட்டவிரோதமான முறையில் தென்னிலங்கை மீனவர்கள் கடற்றொழில் நடவடிக்கையை மேற்கொண்டதை நேரில் உறுதிப்படுத்தினார்.
மேலும் அங்கே நின்ற சுரங்க உள்ளிட்ட தென்னிலங்கை மீனவர்களிடம் இது ஒரு சட்டவிரோத நடவடிக்கை எனவும், இங்கு இப்படிச் செய்வதை அனுமதிக்கமுடியாது எனவும் ,மேற்படி நடவடிக்கைகள் தொடர்ந்தால் கடும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டி வரும் எனவும் தெரிவித்தார்.
இதே வேளை,அங்கிருந்தபடியே கடற்றொழில் நீரியல் வள உதவிப்பணிப்பாளருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த அத்து மீறல் நடவடிக்கை பற்றி அறிவித்தார்.
இதையடுத்து அங்கிருந்த தென்னிலங்கை மீனவர்கள் தாம் நாளை(இன்று ) வெளியேறுவதாக தெரிவித்தனர்.
ராணுவப் புலனாய்வாளர்களும் அப்பகுதியில் கூடியதால் , நேற்று முள்ளிவாய்க்கால் கரையோரத்தில் நடைபெற்ற இச்சம்பவத்தால் பரபரபப்பு நிலவியது..
தமது அழைப்பை ஏற்று அங்கு வருகை தந்து உடன் நடவடிக்கை எடுத்தமைக்கு ரவிகரனுக்கு தமிழ் மீனவர்கள் நன்றி தெரிவித்தனர்.
இதே வேளை இன்றைய தினம் மேற்படி தென்னிலங்கை மீனவர்கள் அங்கிருந்து வெளியேறி விட்டதை தான் உறுதிப்படுத்தியுள்ளதாக ரவிகரன் தெரிவித்துள்ளார்.
SHARE