முள்ளிவாய்க்காலில் தழிழ் இனம் படாத அவமானமா ஜெயலலிதா அம்மையார் பட்டுடடா? வக்காளத்து வாங்கும் இந்திய திரையுலகம்

538
kolai

இலங்கையின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் தமிழக முதல்வர் ஜெயலிதாவைப் பற்றி அவதூறான செய்தி வெளியானதைக் கண்டித்து இன்று திரையுலகினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுள்ளனர்.

சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு எதிரில் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரையுலக நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன்போது இலங்கைக்கு எதிரான கோஷங்களை  திரையுலகத்தினர் எழுப்பினர்.

“தாயைப் பழித்தவனை தரணியை ஆண்டாலும் விடமாட்டோம்”, “உலகம் போற்றும் தமிழர் தாயை பழிக்க நினைக்காதே நீ கொச்சைப்படுத்த நினைத்தது தமிழக முதல்வரை அல்ல 10 கோடி தமிழர்களின் தாயை”, “தேசப் பிதா என்றால் காந்தி பெரியார் என்றால் ஈவெரா அம்மா என்றால் எங்க முதல்வர்தான்” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இலங்கை அரசு இணையதளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறான கட்டுரை வெளியிடப்பட்ட விவகாரம் இன்று மக்களவையிலும் எதிரொலித்தது.

மக்களவை அதிமுக உறுப்பினர் தம்பிதுரை, அவையில் இந்த விவகாரத்தை எழுப்பி உரையாற்றினார்.

இலங்கை அரசின் இந்த மோசமான செயலுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், இலங்கை அரசுக்கு எதிராக அதிமுக உறுப்பினர்கள் கடும் கோஷம் எழுப்பினர். இதனால் அவையை நண்பகல் 12.30 மணி வரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் அறிவித்தார்.

இது குறித்து பதிலலித்த அவைத் தலைவர் தனபால், இலங்கை அரசு இணையதளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு கட்டுரை வெளியிடப்பட்ட விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அறிவித்துள்ளார்.

இலங்கை அரசு இணைய தளத்தில் வெளியான அவதூறு கட்டுரைக்கு அந்நாட்டு அரசு மன்னிப்புக் கோரி, இணையதளத்தில் இருந்தும் அந்த கட்டுரை நீக்கப்பட்டு விட்டது.

இந்த விடயம் குறித்து தமிழக கட்சிகள் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளதால், அவையில் பேச வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

 

SHARE