முள்ளிவாய்க்காலில் மரணித்த உறவுகளிற்கான நினைவேந்தல் நிகழ்வு வடமாகாணசபை பேரவை கட்டடத்தொகுதியினில் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

479

முள்ளிவாய்க்காலில் மரணித்த உறவுகளிற்கான நினைவேந்தல் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை கைதடியிலுள்ள வடமாகாணசபை பேரவை கட்டடத்தொகுதியினில் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. நாளை 16ம் திகதி முதல் 18 ம் திகதி வரையான காலப்பகுதியினை நினைவேந்தல் காலமாக அனுஸ்டிக்கவுள்ளதாக தெரிவித்த ஏற்பாட்டுக்குழுவின்  ஊடகப்பேச்சாளர் கே.சிவாஜிலிங்கம் நாளைய தினம் காலை 11 மணிக்கு சுடரேற்றல் மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறுமெனவும் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வினில் வடமாகாணசபையின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கெடுப்பரெ எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

SHARE