முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையில் நடைபெற்றது

504

2009ம் ஆண்டு இதே நாள் முள்ளிவாய்க்கால் மண்ணில் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் உயிர் இரத்தம், சதை கண்ணீருடன் ஒரு வரலாற்றுப் பயணம், சிங்கள பேரினவாத மமதையாலும் வஞ்ககர்களின் சூழ்ச்சியாலும் மௌனிக்கப்பட்டது.

இன்றுவரை எத்தனை இலட்சம் தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டார்கள் என்பதை அறிய முடியாத அளவில் ஒரு பெரும் மானுட அவலம் அங்கே நிகழ்ந்து முடிந்தது.

இன்று அந்த மானுட அவலத்தால் உலகம் அதிர்வுற்று இருக்கும் வேளையில் எமது உயிரிழந்த மக்களின் நினைவுகளை கூட அஞ்சலிக்க முடியாதபடி சிறிலங்கா அரசாங்கம் தடைகளையும் அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்திவந்த நிலையில், இன்று தாயக மக்கள் தங்கள் உற்ற சொந்தங்களின் நினைவுளை கண்ணீர் மல்க தங்கள் உள்ளங்களில் நினைவு கூர்ந்தனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் வடமாகாணசபை கல்வி அமைச்சர் குருகுலராஜா, உறுப்பினர் பசுபதிப்பிள்ளை உட்பட பிரதேசபை உறுப்பினர்கள், கட்சியின் மாவட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் தீபங்கள் ஏற்றி வணங்கினர்.

 

SHARE