முஸ்லிம் காங்கிரஸின் நான்கு எம்.பிக்களை சுதந்திரக் கட்சியில் இணைக்க முயற்சி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர், அவர்களுடன் சில சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.

413
முஸ்லிம் காங்கிரஸின் நான்கு எம்.பிக்களை சுதந்திரக் கட்சியில் இணைக்க முயற்சி
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த 4 நாடாளுமன்ற உறுப்பினர்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைத்து கொள்வதற்காக திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களை சுதந்திரக் கட்சியில் இணைத்து கொள்வதற்காக அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர், அவர்களுடன் சில சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கான அரசியல் தீர்மானத்தை எடுத்தால், மேற்படி 4 நாடாளுமன்ற உறுப்பினர்களை சுதந்திரக் கட்சியில் இணைத்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க சம்பந்தப்பட்ட அமைச்சர் எண்ணியுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு நாடாளுமன்றத்தில் 8 உறுப்பினர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE