முஸ்லிம் சமுதாயத்தினரிடம் தினப்புயல் பத்திரிகை பகிரங்க மன்னிப்பு

703

பங்குனி 16,2014 அன்று  வெளிவந்த தினப்புயல் பத்திரிகையில்,  ஆன்மீக உலகம் பகுதியில் நபிகள் நாயகம் தொடர்பாக எழுதப்பட்டிருந்த வாசகங்கள் தவறானவை.    குறிப்பிடப்பட்ட விடயம் என்னவென்றால் முகம்மது ஒரு பாவி இயேசு நாதர் பாவங்கள் செய்யவில்லை கிறிஸ்துவுக்குள் எதிரிகள் இல்லை என்று ஆரம்பித்து முகம்மதுவின் கல்லறை மூடி இருக்கின்றது ஏனென்றால் அவர் இறந்துவிட்டார் இயேசு நாதரின் கல்லறை திறந்திருக்கிறது ஏன் என்றால் அவர் மறித்து உயிர்த்தெழுந்தபடியால் என்று அந்த வாசகங்கள் முடிகின்றன.

இதுதொடர்பாக முஸ்லிம் சமுதாயத்தினரிடமும் மௌலவிகளிடமும் கருத்துக்களைக் கேட்டு இது முஸ்லிம் சமுதாயத்தினரையும் முகம்மது நபி அவர்களையும் இழிவு படுத்தும் விடயமாக அமைந்திருப்பதனால் தினப்புயல் பத்திரிகை நிறுவனமானது உலகமெங்கும் வாழும் முஸ்லிம் சமுதாயத்தினரிடமும் இலங்கையில் வாழ்கின்ற மௌலவிகளிடமும் பகிரங்க மன்னிப்பைக் கேட்டுக்கொள்கின்றது. தினப்புயல் பத்திரிகையானது கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடுநிலையுடன் செய்திகளை வழங்கிவருகின்றது. அதற்காகவே ஆன்மீக உலகம் என்கின்ற செய்திகளையும் வெளியிட்டது. இனிவரும் காலங்களிலும் கூட இப்பத்திரிகை நடுநிலமை வகிக்கும் என்பதையும் முஸ்லிம் சமுகத்தினருக்கும மௌலவிகளுக்கும் அறியத்தருகின்றோம்.

தினப்புயல் நிர்வாகம்

SHARE