அரசின் ஒட்டுண்ணியாக செயற்பட்டுவந்த றிசாட் பதியுதீன் தனது முடிவினை மாற்றி முஸ்லீம் மார்க்கத்தினையும், சுயகௌரவத்தினையும் காப்பாற்றுவதற்காக அனைத்து பதவிகளையும் தூக்கியெறிந்துவிட்டு பொதுக்கூட்டமைப்பிற்கு ஆதரவளித்தமையை யாவரும் அறிந்ததே. கிழக்கில் ஒரு ஹிஸ்புல்லா.
தெற்கில் ஒரு அஸ்வர். இஸ்லாம் மார்க்கத்தினையும் இஸ்லாம் இனத்தினையும் கொச்சைப்படுத்தி, பொதுபலசேனா மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் இணைந்துசெயற்படுகின்றார்கள். அவர்களுடன் இந்த துரோகிகளும் இணைந்து செயற்படுவது முஸ்லீம் சமுதாயத்தினரை அவமானப்படுத்தும் செயலாகும். இவர்கள் ஒரு உண்மையான முஸ்லீம் ஆக இருக்கமாட்டார்கள் என்றே கருதப்படுகின்றது.
பகிரங்கமாகவே எமது பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டன. எமது இனத்திற்கெதிராக 344 வன்முறைகளை பொதுபலசேனா என்ற அமைப்பு கட்டவீழ்த்துவிட்டது. இவையெல்லாவற்றையும் செய்த இவ்வமைப்புடன் இன்று இவர்கள் கைகோர்த்து நிற்பது மிகவும் கேவலமானதொரு விடயமாகும். இதனைவிட இவர்கள் தெருவோரத்தில் இருந்து கையேந்தும் நிலையேற்படும். எமது மார்க்கம் ஒடுக்கப்படுகின்ற பொழுது அதற்கெதிராக செயற்படவேண்டும் என்பதே அல்லாஹ்வினுடைய கட்டளை. ஆகவே இதனை முஸ்லீம் சமுதாயத்தினர் நன்கு அறிவார்கள். எதிர்வரும் 08ம் திகதி முஸ்லீம் சமுதாயத்தினரும், தமிழ் மக்களும் மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்வதே சிறந்ததாகும்.