மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்: ஒரு பயணம்

460
ஜப்பானின் மேற்கே அமைந்துள்ள Kyoto-வில் புறநகர் பகுதியில் உள்ள அராஷியாமா என்னும் மாவட்டத்தில் மூங்கில் காடுகள் அமைந்துள்ளது.இயற்கை அழகு மிகுந்து காணப்படும் இந்த காடுகளில் எண்ணற்ற அளவிலான மூங்கில் மரங்கள் வானளவிற்கு வளர்ந்துள்ளது.

முற்றிலும் மூங்கிலால் சூழ்ந்துள்ள இந்த காடுகளுக்கு ஆண்டுதோறும் அதிகளவிலான சுற்றுலாவாசிகள் வந்து செல்கின்றனர்.

இந்த அழகிய மூங்கில் காடுகளுக்குள் செல்லும்போது, நம்மை சுற்றியிருக்கும் பச்சை நிறத்திலான ஆயிரமாயிரான மூங்கில்களால் நாம் வேறு ஏதோ புதிய உலகத்தில் இருப்பது போன்ற பிரமிப்பு ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

மூங்கில் வேகமாக வளரும் தன்மை கொண்டதால், இங்கு வளரும் மூங்கில்களை அறுவடை செய்தாலும் மீண்டும் வேகமாக மூங்கில் தனது உயரத்தை எட்டிவிடுகிறது.

மேலும், இந்த மூங்கில் காடுகளை சுற்றி பல புத்த கோயில்களும் இடம்பெற்றுள்ளதால் இந்த மூங்கில் காடு மிகவும் புனிதமாகவும் கருதப்படுகிறது.

SHARE