மூதூர் பகுதியில் இருந்து முன்னதாக ஆணைக்குழுவில் முறைப்பாடுகளைப் பதிவு செய்தோர் வாய்மொழி மூலமான வாக்குமூலத்தை அளிக்க அழைக்கப்பட்டிருந்ததாக, ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டப்ளியூ.குணதாஸ தெரிவித்துள்ளார்.

152

 

காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு திருகோணமலையில் இரண்டாவது நாளாக இன்று தொடர்ந்தும் தனது முறைப்பாடுகளை பதிவு செய்து கொண்டது.
140808104241_mannar_commission_missing_512x288_bbc

இதன் முதற்கட்டமாக மூதூர் பகுதியில் நேற்றும் இன்றும் இதன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மூதூர் பகுதியில் இருந்து முன்னதாக ஆணைக்குழுவில் முறைப்பாடுகளைப் பதிவு செய்தோர் வாய்மொழி மூலமான வாக்குமூலத்தை அளிக்க அழைக்கப்பட்டிருந்ததாக, ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டப்ளியூ.குணதாஸ தெரிவித்துள்ளார்.

இதேவேளை புதிய முறைப்பாடுகளை முன்வைக்க விரும்புபவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நேற்றைய தினம் மூதூர் பிரதேச செயலகத்தில் விசாரணை நடைபெற்ற போது, செயலகத்திற்கு வெளியில் ஒன்றுதிரண்ட மக்கள் உள்நாட்டு விசாரணையில் நம்பிக்கை இல்லை சர்வதேச விசாரணை தேவை என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை மற்றும் நாளை முறுதினம் (29,30ம் திகதிகளில்) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

காணாமல் போனவர்கள் தொடர்பாக கண்டறிவதற்கான ஆணைக்குழுவினை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மக்ஸ்வெல் பராக்கிரம பரணஹம தலைமையில் நியமித்திருந்தார். இவ் ஆணைக்குழு கடந்த ஆண்டில் வடக்கின் பல பகுதிகளிலும் பதிவுகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

SHARE